டெலாவேர்: டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி இலோன் மஸ்கின் மொத்த மதிப்பு உச்சத்தை எட்டியுள்ளது.
டெலாவேர் நகரின் உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 19) வழங்கியுள்ள தீர்ப்பு அவரின் மொத்த மதிப்பை S$968 பில்லியனுக்கு (US$749 பில்லியன்) உயர்த்தியுள்ளது.
உச்சநீதிமன்ற விசாரணையில் கடந்த 2018ஆம் ஆண்டுக்கான அவரது S$75 பில்லியன் (US$56 பில்லியன்) மதிப்புள்ள ஊதியமும் 2024ஆம் ஆண்டு பங்குச் சந்தையில் முடக்கிவைக்கப்பட்ட டெஸ்லா நிறுவனத்தின் S$188 பில்லியன் (US$139 பில்லியன்) மதிப்புள்ள உரிமங்களும் அவருக்கு திருப்பித் தரப்படவேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த விவரங்களை ஃபோர்ப்ஸ் அமைப்பு அதன் பெருஞ்செல்வந்தர்களின் பட்டியலில் வெளியிட்டுள்ளது.
திரு மஸ்கின் 2018ஆம் ஆண்டுக்கான ஊதியத் தொகுப்பை ‘கற்பனை மீறிய தொகை’ என்று கீழ் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நிராகரித்திருந்தது.
உச்ச நீதிமன்றம், கீழ்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நியாயமற்றது என்று வகைப்படுத்தியது.
அண்மையில் திரு இலோன் மஸ்க் தொடங்கியுள்ள ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம் பொது வர்த்தகச் சந்தையில் இடம்பெறலாம் என்ற செய்தி வெளிவந்து அவரின் மொத்த மதிப்பு S$860 பில்லியனுக்கும் மேல் (US$600 பில்லியன்) உயரும் என்று மதிப்பிடப்பட்டது. அத்தகைய மதிப்பை எட்டிய முதல் செல்வந்தர் என்ற பெருமையை அவர் பெற்றிருந்தார்.
அதுமட்டுமின்றி நவம்பர் மாதம் அவரின் ஊதியத்தை வரலாறு காணாத அளவு ஒரு டிரில்லியன் (1,000,000,000,000) அமெரிக்க டாலருக்கு உயர்த்த டெஸ்லா நிறுவன பங்குதாரர்கள் ஒப்புதல் வழங்கியிருந்தனர்.
செயற்றை நுண்ணறிவுத் திறனையும் மின்வாகன தொழில்நுட்பத்தையும் தொலைநோக்குடன் முன்னெடுத்த அவரின் செயல்பாட்டுக்கான வெகுமதி என்று அதனை பங்குதாரர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
அதனால் ஃபோர்ப்ஸ் அமைப்பின் உலகச் செல்வந்தர்கள் பட்டியலில் இரண்டாம் நிலையில் உள்ள கூகிள் நிறுவன இணைத் தோற்றுனரான லேரி பேஜ், திரு இலான் மஸ்கைவிட S$647 பில்லியன் (US$500 billion) மொத்த மதிப்பில் பின்தங்கியுள்ளார்.

