மீண்டும் உயிர்பெற தமது சடலத்தைப் பத்திரமாகப் பதப்படுத்தி வைக்கும் பெருஞ்செல்வந்தர்

மீண்டும் உயிர்பெற தமது சடலத்தைப் பத்திரமாகப் பதப்படுத்தி வைக்கும் பெருஞ்செல்வந்தர்

1 mins read
c78b73ea-5ae9-485f-a74a-e5ee04b2256a
படம்: ஏஎஃப்பி -

உலகின் ஆகப்பெரும் செல்வந்தர்களில் பீட்டர் தியலும் ஒருவர்.

தொழில்நுட்பங்களில் அதிக முதலீடு செய்யும் அவர், தான் மாண்ட பிறகு தமது சடலத்தைப் பத்திரமாகப் பதப்படுத்தி வைக்க விண்ணப்பித்துள்ளார்.

எதிர்காலத்தில் மாண்டவர்களுக்கு உயிர்கொடுக்கப்படும் தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்படலாம், அதனால் உடலைப் பத்திரப்படுத்தி வைப்பதாக அவர் கூறினார்.

மீண்டும் உயிர்பெற முடியுமா என்பது பற்றி தெளிவாக சொல்லமுடியாது. இருப்பினும் இதை செய்வதில் எந்த ஒரு பிரச்சினையும் இல்லை என்று அவர் கூறினார்.

வலையொளி ஒன்றில் பேசும் போது 55 வயதான தியல் உடலைப் பத்திரப்படுத்தி வைப்பது குறித்து பேசினார்.

பேபால், பவுண்டர்ஸ் பண்ட் போன்ற நிறுவனங்களின் இணை தோற்றுவிப்பாளர் தியல்.

கிட்டத்தட்ட 10 பில்லியன் டாலர் சொத்துக்கு சொந்தக்காரரான தியல், உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 275ஆவது இடத்தில் உள்ளார்.