‘ஓப்பன்ஹய்மர்’ படத்திற்கு ஆஸ்கார் விருது

லாஸ் ஏஞ்சலிஸ்: முதல் அணுகுண்டு உருவாக்கப்பட்டது பற்றிய மிகப் பெரிய வெற்றிப்படமான ‘ஓப்பன்ஹய்மர்’, மார்ச் 11ஆம் தேதி ஹாலிவுட்டில் நடைபெற்ற விருது நிகழ்ச்சியில் ஆகச் சிறந்த படத்திற்கான விருதைத் தட்டிச் சென்றுள்ளது.

பிரிட்டிஷ் இயக்குநர் கிறிஸ்டஃபர் நோலன் இயக்கிய அந்தப் படத்தில், ஐயர்லாந்து நடிகர் சில்லியன் மர்ஃபி, இயற்பியலாளர் ஜே. ராபர்ட் ஒப்பன்ஹய்மராக நடித்துள்ளார்.

இரண்டாம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டுவரக்கூடிய ஆயுதம் ஒன்றை 1940களில் உருவாக்க அமெரிக்கா எடுத்த முயற்சிகளை வழிநடத்தியவர் அவர்.

ஆகச் சிறந்த நடிகர் விருது, மர்ஃபிக்குச் சென்றது. நோலன் ஆகச் சிறந்த இயக்குநர் விருதைப் பெற்றார்.

அமெரிக்க நடிகர் ராபர்ட் டௌனி ஜூனியருக்கு ஆகச் சிறந்த துணை நடிகர் விருது கிடைத்தது.

அமெரிக்க நடிகையான எம்மா ஸ்டோன், ‘புவர் திங்க்ஸ்’ எனும் படத்திற்கு ஆகச் சிறந்த நடிகைக்கான விருதை வென்றார்.

அறிவியல், அரசியல் பற்றிய மூன்று மணி நேர வரலாற்றுப் படமான ‘ஓப்பன்ஹய்மர்’ $953.8 மில்லியன் (S$1.27 பில்லியன்) அமெரிக்க டாலரைச் சம்பாதித்தது.

ஆகச் சிறந்த படத்திற்கான விருதைப் பெற்ற முதல் நோலன் படம் அது.

‘ஓப்பன்ஹய்மர்’ படத்துடன், ‘பார்பி’, ‘தி ஹோல்ட்ஓவர்ஸ்’, ‘தி ஸோன் அஃப் இன்ட்ரஸ்ட்’ ஆகிய படங்களும் ஆகச் சிறந்த படத்திற்கான விருதுக்கு நியமிக்கப்பட்டிருந்தன.

‘மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அன்ட் சைன்சஸ் அகாடமி’யைச் சேர்ந்த ஏறக்குறைய 10,500 உறுப்பினர்கள் ஆஸ்கார் வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுத்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!