பறவைக் காய்ச்சல் கிருமிப் பரவல்: ஆய்வாளர்கள் எச்சரிக்கை

1 mins read
19db618d-4764-4aa1-8a77-350786b0161a
பறவைக் காய்ச்சல் மனிதர்களிடையே பரவக்கூடும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என அமெரிக்க சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். - படம்: ஏஎஃப்பி

பாரிஸ்: பறவைக் காய்ச்சலால் ஏற்படக்கூடிய கிருமிப்பரவல் குறித்து சுகாதார ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். அமெரிக்காவில் பசுக்களிடையே இக்காய்ச்சல் பரவிவருகிறது. பறவைக் காய்ச்சலை ஏற்படுத்தும் கிருமிகள் மரபணு திரிபுக்கான அறிகுறிகளைக் காட்டுவதாகவும் அதன் மரபணுவில் மாற்றம் ஏற்பட்டால் இக்காய்ச்சல் மனிதர்களுக்கும் பரவும் அபாயம் இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

பறவைக் காய்ச்சல் மனிதர்களிடையே பரவக்கூடும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என அமெரிக்க சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால், பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் மிகவும் குறைவு எனக் கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்