லண்டனில் கோவில் கட்ட ரூ 250 கோடி நன்கொடை வழங்கிய இந்தியர்

1 mins read
6d5442f0-cb18-4416-baa2-6b39a720347e
படம்: சமூகஊடகம் -

லண்டனில் ஜெகநாதர் கோவில் கட்ட பெருஞ் செல்வந்தர் பிஸ்வநாத் பட்நாயக் 250 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

பிஸ்வநாத் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

லண்டன் புறநகர்ப் பகுதியில் 15 ஏக்கர் நிலப்பரப்பில் அந்த கோவில் அமைகிறது. நிலம் வாங்க மட்டும் 70 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

வெளிநாடுகளில் ஒரு இந்துக் கோவில் கட்ட இவ்வளவு பெரும் தொகையை ஒரு தனிநபர் வழங்குவது இதுவே முதல்முறை.

கோவில் கட்ட நிதி கொடுத்தது தமக்கு மகிழ்ச்சி தருவதாக பிஸ்வநாத் கூறினார். கோவிலின் கட்டுமானப் பணிகள் விரைவில் முடிவுறும் என்றும் அவர் கூறினார்.

கோவிலின் முதற்கட்டப் பணிகளை 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் திரு பிஸ்வநாத் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்