அமெரிக்காவின் நார்த் கரோலினா மாநிலத்தில் வித்தியாசமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
ஏப்ரல் 11ஆம் தேதி மாலை நேரத்தில் தமது வீட்டின் தோட்டப்பகுதியில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த ஆடவர் திடீரென ஒரு கறுப்புக் கரடி தன் அருகில் நெருங்கி வருவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
கரடியிடம் சிக்காமல் இருக்க அங்கிருந்து தப்பியோடினார் ஆடவர். ஆடவர் ஓடியதைக் கண்ட கரடியும் பயத்தில் மற்றொரு பக்கம் ஓடியது.
தாம் கரடியிடம் எதிர்கொண்ட அனுபவத்தை டேவிட் ஓபன்ஹெய்மர் என்ற அந்த ஆடவர் சமூக ஊடகங்களில் வெளியிட்டார்.
காணொளி பார்க்க நகைச்சுவையாக இருந்தாலும் காட்டு விலங்குகளை இவ்வளவு அருகில் பார்த்தது தமக்கு அதிர்ச்சி தருவதாக ஓபன்ஹெய்மர் கூறினார்.

