பிரேசிலில் நீதிமன்றத்தில் குண்டுவெடிப்பு; ஒருவர் மரணம்

1 mins read
5467accc-2990-42c4-aab0-831eec140282
இன்னும் சில நாள்களில் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் ஜி-20 மாநாடு நடைபெற இருக்கும் நிலையில் இந்தக் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளன - படம்: ராய்ட்டர்ஸ்

சாவ் பாவ்லோ: பிரேசிலில் நவம்பர் 13ஆம் தேதியன்று இரண்டு குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்தன.

பிரேசிலின் தலைநகரம் பிரேசிலியாவில் உள்ள முக்கிய சின்னமான ‘பிளாசா ஆஃப் தி த்ரீ பவர்ஸ்’ எனும் இடத்தில் குண்டுகள் வெடித்தன.

குண்டுவெடிப்புகள் அந்நாட்டின் உச்ச நீதிமன்றம், நாடாளுமன்றக் கட்டடம், அதிபர் மாளிகை அருகில் நிகழ்ந்தன.

இதில் ஒருவர் மரணம் அடைந்தார்.

முதல் குண்டுவெடிப்பு பிரேசிலின் உச்ச நீதிமன்றத்திற்கு அருகில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் நிகழ்ந்தது.

உச்ச நீதிமன்றத்தில் இருந்தோர் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

வெடிகுண்டுகள் வெடிப்பதற்குச் சிறிது நேரம் முன்பு பிரேசிலிய அதிபர் லுயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, அதிபர் மாளிகையிலிருந்து புறப்பட்டுச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது.

இன்னும் சில நாள்களில் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் ஜி-20 மாநாடு நடைபெற இருக்கும் நிலையில் இந்தக் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளன.

குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடங்களில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்