ஜோகூர் தேர்தல்: தேசிய முன்னணிக்கு மகத்தான வெற்றி

ஜோகூர் தேர்தல்: தேசிய முன்னணிக்கு மகத்தான வெற்றி

2 mins read
ஜோகூர் தேர்தலில் தேசிய முன்னணிக் கூட்டணி அமோக வெற்றிகண்டது
e2e33e66-c972-455b-850e-5173c29b29ee
தேசிய முன்னணிக் கூட்டணியின் தலைமைச் செயலாளர் ஸாம்பிரி அப்துல் காதர். - கோப்புப் படம்: பெர்னாமா

ஜோகூர் பாரு: நடந்துமுடிந்த ஜோகூர் மாநிலத் தேர்தலில் தாங்கள் மூன்றில் இரு பங்குப் பெரும்பான்மை வாக்குகள் கிடைத்து வெற்றிபெற்றது மக்கள் நிலையான, ஆற்றல்மிக்க அரசாங்கத்தை விரும்புவதை எடுத்துக்காட்டுவதாக தேசிய முன்னணிக் கூட்டணி கூறியுள்ளது.

ஜோகூர் வாக்காளர்கள் தங்களுக்குப் பெரும்பான்மையுடன் வெற்றியைத் தந்ததற்காக அவர்களுக்கு நன்றியுடன் இருப்பதாக தேசிய முன்னணியின் தலைமைச் செயலாளர் ஸாம்பிரி அப்துல் காதர் கூறியுள்ளார். இது சாதாரண அரசியல் வெற்றி அல்ல என்றும் மக்கள் தங்களுக்கு அளித்துள்ள பொறுப்பு என்றும் அவர் சொன்னார்.

56ல் பிஎன் 48ல் வெற்றி

56 தொகுதிகளில் தேசிய முன்னணி 48ல் வெற்றிபெற்றது. 2022 ஜோகூர் தேர்தலில் வென்றதைவிட கூடுதலாக இரண்டு தொகுதிகளில் அது வெற்றிபெற்து.

அதை எதிர்த்துப் போட்டியிட்ட, மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமின் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி எஞ்சிய எட்டு தொகுதிகளில் வென்றது. 2022 தேர்தலில் அக்கூட்டணி 12 இடங்களில் வென்றது.

ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 12) அதிகாலை ஒரு மணியளவில் தேர்தல் ஆணையம் முடிவுகளை உறுதிப்படுத்தியது. சனிக்கிழமை (ஜூலை 11) நடந்துமுடிந்த ஜோகூர் தேர்தலில் தேசிய முன்னணி, பக்கத்தான் ஹரப்பான் ஆகிய இரண்டு கூட்டணிகள்தான் எல்லாத் தொகுதிகளிலும் போட்டியிட்டன.

மற்ற எல்லாக் கட்சிகளும் கூட்டணிகளும் ஒன்றிலிருந்து 33 வேட்பார்களைக் களமிறக்கின.

அன்வார் வாழ்த்து

திரு அன்வார் தேசிய முன்னணிக்குத் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார். அவர் வாக்காளர்களுக்கும் தமது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

தேர்தல் முடிந்துள்ள நிலையில் செழிப்புமிக்க, முன்னேற்றப் பாதையில் செல்லக்கூடிய ஜோகூரை உருவாக்க எல்லோரும் ஒன்றுபட்டு செயல்படவேண்டிய நேரம் இது என்றார் அவர்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

“நமது குறிக்கோள் தெளிவாக உள்ளது. தோற்றாலும் சரி, வென்றாலும் சரி, எல்லா பக்கத்தான் ஹரப்பான் வேட்பாளர்களும் தொடர்ந்து சேவையாற்றி மக்களின் கவலைகளுக்குக் குரல் கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்,” என்று திரு அன்வார் சனிக்கிழமை இரவு ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.

பக்கத்தான் ஹரப்பானிடமிருந்து தேசிய முன்னணிக்குக் கைமாறிய தொகுதிகளில் ஜோகூர் ஜெயா, புக்கிட் பாத்து, ஜெமென்டா, தாங்காக் ஆகியவை அடங்கும். தேசிய முன்னணி ஆட்சி புரிந்த தொகுதிகளில் கூடுதல் எண்ணிக்கையில் மக்கள் வாக்களிக்கத் திரண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
உலகம்மலேசியாதேர்தல்வெற்றி