நியூயார்க்: அமெரிக்காவின் சிகாகோ நகரிலிருந்து புறப்பட்டுச் சென்று டிசம்பர் 24ஆம் தேதியன்று ஹவாயியில் தரையிறங்கிய யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தின் சக்கரத்தளத்தில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
யுனைடெட் ஏர்லைன்ஸ் 202 விமானத்தின் பிரதான சக்கரத்தளத்தில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது,” என்று அந்த விமானச் சேவை நிறுவனம் டிசம்பர் 25ஆம் தேதியன்று அறிக்கை வெளியிட்டது.
மாண்டவரின் அடையாளம் இன்னும் தெரியவில்லை என்று ஹவாயி காவல்துறை தெரிவித்தது.
மரணம் குறித்து விசாரணை நடைபெறுகிறது.
ஹவாயி நகரின் சட்ட, அமலாக்கப் பிரிவுடன் யுனைடெட் ஏர்லைன்ஸ் உதவி வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
அந்த நபர் எவ்வாறு விமானத்தின் சக்கரத்தளத்துக்குள் நுழைந்தார் என்று இன்னும் தெரியவில்லை.
அந்த இடத்துக்கு விமானத்தின் வெளிப்பகுதியிலிருந்து மட்டுமே செல்ல முடியும் என்று யுனைடெட் ஏர்லைன்சின் செய்தித்தொடர்பாளர் கூறினார்.

