துருக்கி நிலநடுக்கம்: காற்பந்து வீரரின் உடல் கண்டெடுப்பு

துருக்கி நிலநடுக்கம்: காற்பந்து வீரரின் உடல் கண்டெடுப்பு

1 mins read
8f4f387f-4d8b-4e73-8abe-7f092a07f4e7
படம்: ராய்ட்டர்ஸ் -

துருக்கிய நிலநடுக்க இடிபாடுகளிலிருந்து கானா நாட்டைச் சேர்ந்த காற்பந்து வீரரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக 31 வயதான கிறிஸ்டியன் அட்சு உயிருடன் இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

ஹாத்தே எனும் மாநிலத்தில் உள்ள சொகுசு உயர்மாடிக் குடியிருப்பு இடிபாடுகளுக்கிடையே அட்சுவின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் அந்த கட்டடத்தில் தங்கியிருந்தார். அவருடைய கைத்தொலைபேசியும் தனிப்பட்ட சில பொருள்களும் அவருக்கு இருந்ததாகக் கூறப்பட்டது.

இங்கிலிஷ் பிரிமியர் லீக் குழுக்களான செல்சி, நியூகாசல் ஆகிய குழுக்களில் அட்சு விளையாடியுள்ளார். சென்றாண்டு துருக்கி சூப்பர் லீ அணியில் அவர் சேர்ந்துகொண்டார்.