கெண்டிங் நிலச்சரிவு: நாயை அணைத்தபடி மாண்டவரின் சடலம் கண்டுபிடிப்பு

கெண்டிங் நிலச்சரிவு: நாயை அணைத்தபடி மாண்டவரின் சடலம் கண்டுபிடிப்பு

1 mins read
37ad8464-b1ba-42a8-9d8d-263c10b58400
படம்: கோர்ப்பரெட் ஜேபிபிஎம் -

மலேசியாவின் கெண்டிங் பகுதியில் உள்ள பாத்தாங் காலியில் சென்ற வாரம் நேர்ந்த நிலச்சரிவில் மாண்டோரின் எண்ணிக்கை 26க்கு அதிகரித்து உள்ளது.

தமது நாயை இறுக்கமாக அணைத்தபடி மாண்டுகிடந்த ஓர் ஆடவரின் உடலை மீட்புப் பணியாளர்கள் மீட்டெடுத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவரது உடல் நிலத்துக்குக் கீழே நான்கு மீட்டர் அடியில் கண்டுபிடிக்கப்பட்டது.

நிலச்சரிவு ஏற்பட்ட நேரத்தில் ஆடவருடன் மூன்று நாய்கள் இருந்தன என்று அதிகாரிகள் நம்புவதாக நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியது.

ஆனால் இரண்டு நாய்கள் மட்டுமே இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சென்ற வெள்ளிக்கிழமையன்று உரிமமின்றி முகாம் ஒன்று அமைக்கப்பட்டிருந்த இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது.

இன்றைய நிலவரப்படி இன்னும் ஏழு பேரைக் காணவில்லை.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து முகாம்களை நடத்தும் நிறுவனங்கள் வருவாயை இழக்க நேரிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

அத்தகைய நிறுவனங்களின் முகாம்களைப் பயன்படுத்துவதற்கு தாங்கள் செய்த விண்ணப்பங்களைப் பலர் ரத்து செய்துள்ளனர்.