விமான நிலைய மின்தூக்கியின் அடியில் பெண்ணின் சடலம்

விமான நிலைய மின்தூக்கியின் அடியில் பெண்ணின் சடலம்

1 mins read
82ab3f71-911d-4d7f-a03f-1a080f74297d
படம்: டுவிட்டர் -

இந்தோனீசியாவின் மேடான் நகரில் உள்ள கோலனாமு விமான நிலையத்தில் உள்ள மின்தூக்கியின் அடியில் பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்தப் பெண் ஏப்ரல் 24ஆம் தேதி மாண்டார், அவரின் உடல் மூன்று நாள்களுக்குப் (ஏப்ரல் 27) பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அய்சியா சிண்டா டேவி எனப்படும் அந்தப் பெண் மின்தூக்கியில் இருந்து கிழே விழும் காட்சி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

காணொளியில் அந்தப் பெண் இரு பக்கம் கதவுகள் உள்ள மின்தூக்கியில் ஏறுகிறார். தான் ஏறிய கதவு பக்கமே பார்த்து நிற்கும் அவர் கதவுகள் லேசாகத் திறந்திருப்பதைக் கண்டு அதைத் தொடுகிறார்.

பின்னர் ஒரு அடி முன் சென்ற அவர், மின்தூக்கியில் இருந்து கீழ்ப்பகுதிக்குள் விழுந்தார்.

மின்தூக்கியில் இருந்து மோசமான வாடை வந்ததைத் தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய சோதனையில் பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

கிட்டத்தட்ட 5 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு சடலம் மீட்கப்பட்டது.

சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்