தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஹாங்காங்கில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு: 6,000 பேரை வெளியேற்றத் திட்டம்

1 mins read
23237540-f809-464f-aeaf-ed7de6981a3d
ஹாங்காங்கின் கட்டுமானத் தளமொன்றில் 450 கிலோகிராம் எடை கொண்ட வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்.

ஹாங்காங்: ஹாங்காங், கட்டுமானத் தளமொன்றில் இரண்டாம் உலகப் போர்க்காலத்திய வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்களை வெளியேற்றத் திட்டமிட்டுள்ளது.

வெடிகுண்டு கிட்டத்தட்ட ஒன்றரை மீட்டர் நீளமும் ஏறக்குறைய 450 கிலோகிராம் எடையும் கொண்டது என்று காவல்துறை தெரிவித்தது.

அது செயல்படக்கூடிய நிலையில் இருப்பதாகக் காவல்துறை நம்புகிறது.

“வெடிகுண்டை அகற்றுவதில் அதிக ஆபத்துகள் இருப்பதால் நெருக்கடிக்கால வெளியேற்றத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்,” என்று ஹாங்காங் காவல்துறையின் வட்டாரத் தளபதி ஏண்டி சான் கூறினார்.

குவாரி பே (Quarry Bay)வட்டாரத்தில் உள்ள 18 குடியிருப்புக் கட்டடங்களிலிருந்து சுமார் 6,000 பேரை வெளியேற்றத் திட்டமிட்டுள்ளதாகக் காவல்துறை சொன்னது.

வெடிகுண்டைச் செயலிழக்கச் செய்யும் பணிகள் சனிக்கிழமை (செப்டம்பர் 20) தொடங்கும் என்று கூறப்பட்டது.

இரண்டாம் உலகப் போரின்போது ஆரம்பத்தில் ஹாங்காங்கையும் குறிவைத்தது ஜப்பான். ஜப்பானியர்களுக்கும் கூட்டணிப் படையினருக்கும் இடையில் அப்போது கடுஞ்சண்டை நடந்தது.

இரண்டாம் உலகப் போர் முடிந்து பல ஆண்டுகளாகிவிட்ட நிலையில் இன்றளவும் அவ்வப்போது மலையேறிகளும் கட்டுமான ஊழியர்களும் வெடிகுண்டுகளைப் பார்ப்பதுண்டு.

குறிப்புச் சொற்கள்