உடல்நலமில்லை என்று கூறிய சிறுவன் மாடிப்படியிலிருந்து கீழே விழுந்து மரணம

உடல்நலமில்லை என்று கூறிய சிறுவன் மாடிப்படியிலிருந்து கீழே விழுந்து மரணம

1 mins read
d70550b2-553a-45c4-b9c3-61331a0f52c9
படம்: WEIBO -

சீனாவில் பள்ளிச் சிறுவன் ஒருவன் தனக்கு உடல்நலமில்லை என்று தனது ஆசிரியரிடம் கூற ஏழு முறை கையை உயர்த்தியுள்ளான். எனினும், அவனுக்கு எந்த உதவியும் அளிக்கப்படவில்லை. பள்ளி முடிந்ததும் மாடிப்படியில் இறங்கிய அந்த 8 வயது சிறுவன் கீழே விழுந்து மாண்டான். இந்த சம்பவம் 2020ல் நடந்தது. சம்பவம் குறித்து தனது மகனின் ஆசிரியருக்கு எதிராக மாண்ட சிறுவனின் தாயார் அண்மையில் புகார் அளித்துள்ளார்.

குவோ எனும் அந்த சிறுவன் பத்து நிமிடங்கள் இடைவெளிக்குள் ஏழு முறை தனது கையை உயர்த்தியது வகுப்பறையில் உள்ள கண்காணிப்புக் கேமிராவில் பதிவு செய்யப்பட்டதாக அவனது தாயார் கூறினார். வகுப்பு முடியும்வரை அவனை அமைதியாக இருக்கும்படிசிறுவனின் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். வகுப்பில் பாடம் தொடர்ந்து நடக்க, சிறுவன் மேசை மீது தலைவைத்து சாய்ந்து படுத்துள்ளான்.

வகுப்பு முடிந்து வகுப்பறையிலிருந்து சிறுவன் கிளம்பும்போது அவன் வலியில் துடிப்பது காணொளியில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. மாடிப்படியில் அவன் இறங்க சிரமப்பட்டபோது அவனது ஆசிரியர் அவனை இழுத்துச்சென்றதாக சிறுவனின் தாயார் குறிப்பிட்டுள்ளார். திடீரென சிறுவன் கீழே விழுந்ததில் தனது தலையை மாடிப்படியில் இடித்துக்கொண்டான்.

சிறுவனுக்கு உடல்நலமில்லை என்று தெரிந்தும் அவனது ஆசிரியர் ஏன் தனக்கு தெரியப்படுத்தவில்லை என்ற கேள்வியை சிறுவனின் தாயார் எழுப்பியுளளார்.