தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரசிகர் கட்டியணைத்ததும் மின்சாரம் பாய்ந்து பாடகர் உயிரிழப்பு

1 mins read
d4b187d1-2ef5-4e2c-ab60-38523d8fe998
இசைக்கலைஞர் அய்ரஸ் சசாக்கி, 35. - படம்: இன்ஸ்டகிராம் / அய்ரஸ் சசாக்கி

பிரேசிலியா: மேடையில் பாடிக்கொண்டிருந்தபோது மின்சாரம் பாய்ந்து 35 வயது ஆடவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் பிரேசில் நாட்டின் சலினாபொலிஸ் பகுதியில் ஜூலை 13ஆம் தேதி நிகழ்ந்ததாக பிரேசில் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அய்ரஸ் சசாக்கி என்ற அப்பாடகர், சலினாபோலிசில் உள்ள சோலார் ஹோட்டலில் மேடை நிகழ்ச்சி படைத்துக்கொண்டிருந்தார். அப்போது முழுதும் நனைந்திருந்த ரசிகர் ஒருவரை அய்ரஸ் கட்டியணைத்ததாகவும் அப்போது அருகிலிருந்த கம்பிவடத்திலிருந்து அவர்மீது மின்சாரம் பாய்ந்ததாகவும் கூறப்படுகிறது.

அந்த ரசிகர் நனைந்திருந்ததற்கான காரணம் தெரியவில்லை. இச்சம்பவம் தொடர்பில் காவல்துறை விசாரித்து வருகிறது.

மின்சாரம் பாய்ந்து சசாக்கி உயிரிழந்ததை சோலார் ஹோட்டல் நிர்வாகமும் ஓர் அறிக்கை மூலம் உறுதிப்படுத்தியது.

“சசாக்கின் குடும்பத்தாருக்கு ஆதரவு வழங்க முழுமையான கடப்பாடு கொண்டு, தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். அதிகாரிகளின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம்,” என்று இன்ஸ்டகிராம் வழியாக அவ்விடுதி தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்