மின்சார வாகனங்களுக்கு மாற பிரிட்டனில் $2.5 பில்லியன் உதவித்தொகுப்பு

1 mins read
cc45435f-2900-439b-b0f8-bdb864bce7d1
புதிதாக மின்னூட்ட நிலையங்களை ஏற்படுத்த  £200 மில்லியன் திட்டத்தையும் பிரிட்டிஷ் அரசாங்கம் வகுத்துள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

லண்டன்: மின்சார வாகனங்களுக்கு வேகமாக மாறுவதற்கான முயற்சிகளில் பிரிட்டன் ஈடுபட்டு வருகிறது.

அதற்காக, £1.5 பில்லியன் (S$2.5 பி) மதிப்பிலான உதவித் திட்டம் ஒன்றை அது வகுத்துள்ளது. அந்தத் திட்டத்தை பிரிட்டிஷ் அரசாங்கம் விரைவில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிதாக மின்சார கார்களை வாங்குவதற்கான £1.3 பில்லியன் சலுகைத் திட்டமும் உதவித் தொகுப்பில் அடங்கும் என பிரிட்டன் கூறியுள்ளது.

மின்சார கார் உதவித் திட்டம் கடந்த ஜூலை மாதம் அறிமுகம் கண்டதிலிருந்து 35,000க்கும் மேற்பட்டோர் தங்களது வாகனங்களை மின்சார வாகனங்களாக மாற்றி உள்ளனர். அதற்கான செலவில் $3,750 வரை அளிக்கப்பட்ட சலுகையை அவர்கள் பயன்படுத்திக்கொண்டனர்.

இந்நிலையில், வரும் நவம்பர் 26ஆம் தேதி பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் வரவுசெலவுத் திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது. பிரிட்டன் முழுவதும் மின்சார கார்களுக்கு மின்னூட்டுவதற்கான நிலையங்களை ஏற்படுத்த கூடுதலாக £200 மில்லியன் நிதி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட இருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், பிரிட்டனில் மின்சார கார்களுக்கான தேவை வேகமடையவில்லை. மின்சார கார்களை வாங்குவதற்கான தொடக்கச் செலவுகள் அதிகமாக இருப்பதாக பொதுமக்கள் கருதுவதே அதற்குக் காரணம்.

குறிப்புச் சொற்கள்