உக்ரேனில் ராணுவ உதவியை அதிகரிக்க பிரிட்டிஷ் பிரதமரின் அறிவிப்பு

உக்ரேனில் ராணுவ உதவியை அதிகரிக்க பிரிட்டிஷ் பிரதமரின் அறிவிப்பு

1 mins read
620c9633-ca70-49c1-a479-a8b6b4377947
கீவில் உள்ள அதிபர் மாளிகையில் உக்ரேன் அதிபர் வொலொடிமிர் ஸலென்ஸ்கி (இடது), பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக்கை வரவேற்கிறார். - படம்: ராய்ட்டர்ஸ்

கீவ்: பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் புதிய பாதுகாப்பு உடன்படிக்கை ஒன்றில் கையெழுத்திடவும், ஆளில்லா வானூர்திகளை வாங்க உக்ரேனுக்கு ராணுவ நிதியுதவியை அதிகரிக்கவும் ஜனவரி 12ஆம் தேதி கீவ் சென்றார்.

ரஷ்யப் படையெடுப்பின்போது உக்ரேனின் மிக நெருங்கிய நட்பு நாடுகளில் ஒன்றான பிரிட்டன், அடுத்த நிதியாண்டில் அதன் நிதி ஆதரவை 2.5 பில்லியன் பவுண்டுக்கு (S$4.2 பில்லியன்) அதிகரிக்கும். கடந்த ஈராண்டுகளுடன் ஒப்பிடுகையில், அது 200 மில்லியன் பவுண்டு அதிகம் என்று திரு சுனக் கூறினார்.

“உலகில் உள்ள நமது எதிரிகள் நீண்ட போர்களுக்காக நமக்கு பொறுமையும், வளங்களும் இல்லை என்று நம்புகின்றனர். அதனால், புட்டினுக்கு மட்டுமல்ல, வடகொரியா, ஈரான் உள்ளிட்ட மற்ற பகுதிகளில் உள்ள அவரது நண்பர்களுக்கு நாம் தைரியம் ஊட்டுகிறோம்,” என்று அவர் செய்தியாளர் கூட்டம் ஒன்றில் கூறினார்.

அமெரிக்காவிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் நடக்கும் அரசியல் உட்பூசலினால் இரண்டு முக்கிய உதவித் திட்டங்கள் தடைப்பட்டுள்ள நிலையில், கீவுக்கு மிக முக்கியத் தருணத்தில் திரு சுனக்கின் பயணம் இடம்பெற்றுள்ளது.

2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யப் படையெடுப்புக்குப் பிறகு ராணுவ, நிதி உதவிக்கு கீவ் மேற்கத்திய நாடுகளை அதிகம் சார்ந்துள்ளது.

இரண்டு தலைவர்களும் பாதுகாப்பு உடன்படிக்கை ஒன்றில் கையெழுத்து இட்டனர். கீவ், நேட்டோ ராணுவக் கூட்டணியைச் சேரும்வரை அந்த உடன்படிக்கை நடப்பில் இருக்கும் என்று உக்ரேனியத் தலைவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்