தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பல பில்லியன் செலவில் ஆயுத தொழிற்சாலை அமைக்கும் பிரிட்டன்

2 mins read
55904d84-3aa3-4dc8-909d-9dce9a138fee
பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மர் பல பில்லியன் வெள்ளி செலவில் ஆயுத உற்பத்தியை வலுப்படுத்த திட்டமிடுவதாகத் தெரிவித்தார். - படம்: ராய்ட்டர்ஸ்

லண்டன்: பிரிட்டன் சண்டைக்கு ஆயத்தமாக இருக்கவேண்டும் என்றும் அதிநவீன ராணுவப் படைகள் கொண்ட நாடுகளுக்கு எதிரான போரில் வெற்றிபெறவேண்டும் என்றும் பிரிட்டி‌ஷ் பிரதமர் கியர் ஸ்டார்மர் கூறியுள்ளார்.

அவரது அரசாங்கம், குறைந்தது ஆறு புதிய ஆயுத, வெடிப்பொருள் தொழிற்சாலைகளைக் கட்ட ஏறக்குறைய 2.6 பில்லியன் வெள்ளியை அறிவித்துள்ளது.

பிரிட்டனின் ராணுவ ஆற்றல்களை ஒரு நாளுக்கு முன் பெரிய அளவில் மறுஆய்வு செய்த திரு ஸ்டார்மர் அந்த அறிவிப்பை வெளியிட்டார்.

ஐரோப்பா அதன் சொந்த பாதுகாப்பை வலுபடுத்திக்கொள்ள கூடுதல் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியதை அடுத்து பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் அவற்றின் தற்காப்புத் துறையை வலுப்படுத்த தீவிரமாக முயல்கின்றன.

“அதிநவீன ராணுவப் படைகள் உள்ள நாடுகளால் நாங்கள் நேரடியாக அச்சுறுத்தப்படுகிறோம். எனவே போரிட்டு வெற்றிக்கொள்ள தயாராக இருக்கவேண்டும்,” என்று உக்ரேனை ஆக்கிரமித்த ர‌ஷ்யாவையும் ஈரான், வடகொரியா ஆகியவற்றுடனான அதன் ஒத்துழைப்பையும் சுட்டி திரு ஸ்டார்மர் கருத்துரைத்தார்.

ஆயுதங்களுக்கான முதலீட்டு திட்டத்தை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) அறிவித்த தற்காப்பு அமைச்சர் ஜோன் ஹீலே, அது ர‌ஷ்யாவுக்கு ஒரு செய்தி என்றும் பிரிட்டனின் மந்தமான பொருளியலை ஊக்குவிக்கும் என்றும் கூறினார்.

பிரிட்டனில் உருவாக்கப்பட்ட 7,000 தொலைதூரம் செல்லக்கூடிய ஆயுதங்களைக் கொள்முதல் செய்யும் என்று தற்காப்பு அமைச்சு சொன்னது. அப்படியென்றால் பிரிட்டன் கூடுதலாக 6 மில்லியன் பவுண்ட் தொகையை ஆயுதங்களுக்காகச் செலவிடும்.

அணுவாயுதங்களைச் சுட்டு வீழந்தக்கூடிய அமெரிக்காவில் செய்யப்பட்ட போர் விமானங்களையும் அரசாங்கம் வாங்க திட்டமிட்டுள்ளதாக த சண்டே டைம்ஸ் நாளேடு சொன்னது.

குறிப்புச் சொற்கள்