ஹோர்முஸ் குறித்துப் பல நாடுகளுடன் பிரிட்டன் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் குறித்துப் பல நாடுகளுடன் பிரிட்டன் பேச்சுவார்த்தை

1 mins read
74e86010-636b-4b5b-a473-bea785e9b38b
உலக எரிசக்தி விநியோகத்திற்கு முக்கிய பாதையாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

லண்டன்: ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் வழக்கம் போல் செயல்பட வைக்கும் நோக்கில் பிரிட்டன் கிட்டத்தட்ட 35 நாடுகளுடன் இணையத்தில் பேச்சுவார்த்தை நடத்தின.

பேச்சுவார்த்தை குறித்து பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மெர் புதன்கிழமை (ஏப்ரல் 1) தகவல் வெளியிட்டார். பேச்சுவார்த்தையைப் பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் இவெட் கூப்பர் வழிநடத்துவார் என்றும் திரு ஸ்டார்மெர் கூறினார்.

பேச்சுவார்த்தையில் ஹோர்முஸ் நீரிணையை அரசதந்திர நடவடிக்கைகள் மூலம் எப்படி திறக்க முடியும் என்பது குறித்து விவாதிக்கப்படும் என்று திரு ஸ்டார்மெர் தெரிவித்திருந்தார்.

ஹோர்முஸ் நீரிணையை வழக்கம் போல் செயல்பட வைக்கத் தங்களால் முடிந்த அளவு உதவ விரும்புவதாகவும் பல நாடுகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.

அந்தக் கூட்டறிக்கையில் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன.

கடந்த மாதம் பிப்ரவரி 28ஆம் தேதி இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரானைத் தாக்கின. இதற்குப் பதிலடி தரும் விதமாக ஈரான் மத்திய கிழக்கு நாடுகளில் தாக்குதல் நடத்தி வருகிறது.

அதேபோல், முதல் உலக எரிசக்தி விநியோகத்திற்கு முக்கிய பாதையாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையையும் ஈரான் மூடியது. இதனால் உலக நாடுகள் பல போதிய கச்சா எண்ணெய் விநியோகம் இல்லாமல் தடுமாறுகின்றன.

குறிப்புச் சொற்கள்