உரை நிகழ்த்தியே $1.67 மில்லியனுக்கு மேல் சம்பாதித்த பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர்

உரை நிகழ்த்தியே $1.67 மில்லியனுக்கு மேல் சம்பாதித்த பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர்

1 mins read
436388f0-a8d9-4359-8227-ed0ffeaf026b
-

பிரிட்டிஷ் பிரதமர் பதவியிலிருந்து செப்டம்பரில் வெளியேறியதைத் தொடர்ந்து, உரை நிகழ்த்தியன் மூலம் திரு போரிஸ் ஜான்சன் £1 மில்லியனுக்கு (S$1.67 மி.) மேல் சம்பாதித்துவிட்டார்.

பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நலனுக்கான அதிகாரபூர்வ பதிவகத்தின்படி இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அண்மைய மாதங்களாக நியூயார்க்கில் வங்கியாளர்கள், அமெரிக்காவில் காப்புறுதி நிறுவன ஊழியர்கள் முன்னிலையிலும் போர்ச்சுகலில் சிஎன்என் செய்தி நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த உச்சநிலை மாநாடு, இந்தியாவில் வேறொரு நிகழ்ச்சியிலும் உரை நிகழ்த்தினார்.

ஒவ்வொரு முறையும் திரு ஜான்சன் £215,000 முதல் £277,000 வரை கட்டணம் வசூலித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிதி நலனைப் பட்டியலிடும் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் இணையப் பக்கத்தில் வெளியிடப்பட்ட அதிகாரபூர்வ ஆவணத்தில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது.