ஊழியரைப் பணிநீக்கம் செய்தது பிரிட்டிஷ் அரும்பொருளகம்

ஊழியரைப் பணிநீக்கம் செய்தது பிரிட்டிஷ் அரும்பொருளகம்

1 mins read
2ff5f738-2324-4b89-8aeb-bfb91f788bd6
திருடப்பட்ட பொருள்களில் தங்க நகைகள், ரத்தினங்கள், அரியவகைக் கற்கள் போன்றவை அடங்கும். - படம்: ஏஎஃப்பி

லண்டன்: பிரிட்டிஷ் அரும்பொருளகம் அதன் ஊழியர்களில் ஒருவரைப் பணிநீக்கம் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

தங்க நகைகள், ரத்தினங்கள் உள்ளிட்ட அதன் பொருள்கள் காணாமற்போனதையும் திருடப்பட்டதையும் சேதமடைந்ததையும் கண்டுபிடித்த பிறகு, அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அந்த ஊழியருக்கு எதிராகச் சட்டபூர்வ நடவடிக்கை எடுப்பதாக அரும்பொருளகம் கூறியது. அதோடு, பாதுகாப்பை மறுஆய்வு செய்வதாகவும் அது சொன்னது.

லண்டன் காவல்துறையினர் அதுகுறித்து விசாரிப்பதாகவும் அது தெரிவித்தது.

திருடப்பட்ட பொருள்கள் ஓர் அறையில் வைக்கப்பட்டிருந்ததாகவும் அவற்றில் பல, சிறிய பொருள்களாக இருந்ததாகவும் அரும்பொருளகம் கூறியது.

அந்தப் பொருள்கள் அண்மையில் காட்சிக்கு வைக்கப்படவில்லை என்றும் முக்கியமாக கல்வி, ஆய்வுக் காரணங்களுக்காக வைக்கப்பட்டிருந்தன என்றும் அது தெரிவித்தது.

இது வழக்கத்திற்கு மாறான ஒரு சம்பவம் என்று அரும்பொருளகத்தின் இயக்குநர் கூறினார்.

தங்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்தியிருப்பதாகவும் காணாமற்போன, திருடப்பட்ட, சேதமடைந்த பொருள்களின் தொடர்பில் நிபுணர்களுடன் இணைந்து செயல்படுவதாகவும் அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்