பிரிட்டிஷ் உணவகங்களிலும் மதுக்கூடங்களிலும் செயல்பாட்டு நேரம் குறைப்பு

பிரிட்டிஷ் உணவகங்களிலும் மதுக்கூடங்களிலும் செயல்பாட்டு நேரம் குறைப்பு

1 mins read
70148a2f-6dfb-4efd-a361-7f9e2ae820d7
வெளியில் சாப்பிடுவதும் பானம் அருந்துவதும் குறைந்துள்ளன. - படம்: இணையம்

லண்டன்: பிரிட்டனில் உணவகங்களும் மதுக்கூடங்களும் ஊழியர்களின் வேலை நேரத்தைக் குறைக்கவேண்டிய நிலையில் உள்ளன.

வருடாந்திரச் செலவில் ஏற்பட்டுள்ள 5.79 பில்லியன் வெள்ளி அதிகரிப்பைச் சமாளிக்க அவ்வாறு செய்யப்படுவதாக அத்துறையின் வர்த்தகப் பிரிவுத் தலைவர் கூறினார்.

அதிக அளவில் செலவுகளைச் சமாளிக்க செயல்பாட்டு நேரங்களும் குறைக்கப்படுவதாக ‘யுகேஹாஸ்பிட்டாலிட்டி’யின் தலைமை நிர்வாகி கேட் நிக்கல்ஸ் கூறினார்.

மார்ச் 1ஆம் தேதி முதல், பிரிட்டனில் குறைந்தபட்ச சம்பளங்களுக்குக் கொடுக்கப்படும் அதிகரிப்புகள், அத்துறையின் ஒட்டுமொத்தச் சம்பளத்தை 3.2 பில்லியன் பவுண்டுக்கு உயர்த்தும்.

தனது ஊழியரணியை அதிகம் சார்ந்திருக்கும் துறை என்பதால், வேலைச் செலவுகள் செயல்பாட்டுச் செலவுகளைவிட பாதி மடங்குக்கும் மேலாக உள்ளது என்று ‘யுகேஹாஸ்பிட்டாலிட்டி’ கூறியது.

அதிகமான சம்பளங்கள் பணவீக்க நெருக்கடிகளைக் கூட்டுமா என்பதை இங்கிலாந்து வங்கி அணுக்கமாகக் கவனித்துவருகிறது.

இதற்கிடையே, வெளியில் சாப்பிடுவதும் பானம் அருந்துவதும் குறைந்துவிட்டதாக திருவாட்டி நிக்கல்ஸ் சொன்னார். மக்கள் வாழ்க்கைச் செலவுகளை அதற்குக் காரணமாகச் சுட்டினர் என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்