ஹனோய்: வியட்னாமின் மலைப்பகுதியிலுள்ள சாலை ஒன்றில் சென்றுகொண்டிருந்த பேருந்து கவிழ்ந்ததில் குறைந்தது எழுவர் உயிரிழந்தனர்.
அந்நாட்டின் வடக்குப் பகுதியிலுள்ள யென் பாய் மாநிலத்தில் இந்தச் சம்பவம் நேர்ந்ததாக அந்நாட்டு ஊடகம் குறிப்பிட்டது.
29 இருக்கைகள் கொண்ட அந்தப் பேருந்தில் ஒரு நன்கொடை அமைப்பைச் சேர்ந்தவர் பயணம் செய்ததாக வியட்நாம் நியூஸ் ஏஜன்சி தெரிவித்தது.
உயிர்தப்பிய 10 பேரும் பேருந்து இடர்பாடுகளிலிருந்து மீட்புப் பணியாளர்களால் அகற்றப்பட்டனர். எஞ்சியோர் பேருந்தில் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
பேருந்தைப் பிளப்பதற்குக் கனகரக் கருவி ஒன்றும் பயன்படுத்தப்பட்டது.
பிரேக் கருவியில் ஏற்பட்ட கோளாற்றால் விபத்து ஏற்பட்டிருக்கக்கூடும் என அதிகாரபூர்வ தகவல்கள் கூறுகின்றன.
காவல்துறையினர், ராணுவத்தினர், உள்ளூர் அதிகாரிகள், வட்டாரவாசிகள் ஆகியோரும் மீட்பு முயற்சியில் பங்கேற்று வருகின்றனர். விசாரணை தொடர்கிறது.

