கொழும்பு: இலங்கையில் மலைப்பாதை வழியாகச் சென்றுகொண்டிருந்த பேருந்து ஒன்று பள்ளத்தில் விழுந்ததில் குறைந்தது 21 பேர் உயிரிழந்தனர்.
அத்துடன், 35 பேர்க்கும் அதிகமானோர் காயமடைந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.
இலங்கையின் மத்திய மாநிலத்திலுள்ள இறம்பொடை என்ற கிராமத்தில் இந்தச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (மே 11) காலை நடந்தது.
கதிர்காமத்திலிருந்து புறப்பட்ட அந்தப் பேருந்து, நுவரெலியா-கம்பளைச் சாலை வழியாக குருணாகல்லை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது.
பேருந்து தலைகீழாகக் கவிழந்ததைத் தொலைக்காட்சிக் காணொளி காட்டுகிறது.
விழுந்து நொறுங்கிய பேருந்தின் சிதைவுகளை அகற்றி, காயமடைந்தோரைக் காப்பாற்ற மீட்புப் பணியாளர்களும் வழிப்போக்கர்களும் முற்பட்டது காணொளியில் தெரிந்தது.

