ஓடச் சென்ற ஆடவரைத் தாக்கிய பறவை; தலையில் 6 இடங்களில் காயம்

ஓடச் சென்ற ஆடவரைத் தாக்கிய பறவை; தலையில் 6 இடங்களில் காயம்

1 mins read
4b488ca0-a6df-43a4-9f79-4d101b7b8d22
படம்: எவான் கேமரான் -

ஸ்காட்லாந்தில் உடற்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஆடவரை பறவைத் தாக்கியுள்ளது.

பறவை ஆக்ரோ‌ஷமாகத் தாக்கியதால் ஆடவரின் தலையில் 6 பொத்தல்கள் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது.

அன்கஸ் என்ற கிராமப் பகுதியில் தாம் தாக்கப்பட்டதாக எவான் கேமரான் என்ற ஆடவர் சமூக ஊடகங்களில் பதிவிட்டார்.

பறவை தலையில் தாக்கியபோது ஏதோ ஒரு நபர் தலையில் குத்தியது போல் இருந்ததாக எவான் குறிப்பிட்டார்.

ஆடவர் பஸ்ஸார்ட் என்னும் பறவையால் தாக்கப்பட்டதாகக் கூறினார்.

முதலில் அந்த பறவை தம்மை லேசாகத் தீண்டிவிட்டுச் சென்றதாகவும் அதன் பின்னர் அது மீண்டும் வந்து தம்மை மோசமாகத் தாக்கியதாகக் குறிப்பிட்டார்.

எவான் போலவே தாங்களும் பறவைகளால் தாக்கப்பட்டதாக அவரின் பதிவிற்குக் கீழ் சிலர் பதிலளித்திருந்தனர்.

பிரிட்டன் வட்டாரத்தில் பஸ்ஸார்ட் பறவைகள் பரவலாகக் காணப்படும்.

குறிப்புச் சொற்கள்