லாஸ் ஏஞ்சலிஸ்: அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலம், லாஸ் ஏஞ்சலிசின் வடமேற்குப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 16) மூண்ட காட்டுத் தீயால், பிரபல வெளிப்புற பொழுதுபோக்குத் தலத்திலிருந்து 1,000க்கும் அதிகமானோர் வெளியேற்றப்பட்டனர்.
காட்டுத் தீயால் 12,000க்கும் மேற்பட்ட பரப்பளவிலான நிலம் சேதமடைந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏறக்குறைய 400 தீயணைப்பாளர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டதாக கலிஃபோர்னியா தீயணைப்புத் துறை கூறியது.
சனிக்கிழமை பிற்பகலில் தொடங்கிய காட்டுத் தீ, தென்கிழக்கை நோக்கிப் பரவுவதாக தீயணைப்புத் துறை சொன்னது.
காட்டுத் தீயைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் அதிக வெப்பம், குறைவான ஈரப்பதம், பலத்த காற்றால் தடைப்படுவதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.
தீ பரவுவதைக் கட்டுப்படுத்த, தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் விமானங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

