லாஸ் ஏஞ்சலிஸ்: அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் கடுமையான வெப்பம் காரணமாக அவ்வப்போது காட்டுத்தீ பிரச்சினைகள் ஏற்படுகிறது.
இதன் காரணமாக ஏற்படும் தூய்மைக்கேட்டால் கடந்த 10 ஆண்டில் மட்டும் 52,000 பேர் உயிரிழந்ததாக ஓர் ஆய்வு வெளியாகியுள்ளது.
பொதுவாக காட்டுத் தீயால் ஏற்படும் உடனடி பொருள் சேதம் உயிர் சேதம் ஏற்படுவது போன்ற விவரங்கள் வெளியிடுவது வழக்கம். ஆனால் அவற்றால் ஏற்படும் நீண்டநாள் தாக்கத்தை கலிஃபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
அதிக பாதிப்பை ஏற்படுத்துவது காற்று தூய்மைக்கேடு என்றும் தெரிவிக்கப்பட்டது. அதனால் மட்டும் 52,480 பேர் உயிரிழந்ததாக ஆய்வு குறிப்பிட்டது. பாதிக்கப்பட்டவர்கள் 584 பில்லியன் வெள்ளி வரை மருத்துவச் செலவுகள் செய்திருக்கலாம் என்றும் அது கூறியது.

