தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மின்சிகரெட் தொடர்பாக சிங்கப்பூரின் நிலைப்பாட்டை மலேசியா பின்பற்ற அழைப்பு

1 mins read
0ec05ea4-aa9d-4323-9525-6e504b050c2f
மின்சிகரெட் தொடர்பாக சி்ங்கப்பூரின் நிலைப்பாட்டை மலேசியா பின்பற்ற வேண்டும் என்று மலேசியாவின் பாதுகாப்புமிக்க சமூகக் கூட்டணியின் தலைவர் லீ லாம் தாய் வலியுறுத்தியுள்ளார். - படம்: சுகாதார அறிவியல் ஆணையம்

பெட்டாலிங் ஜெயா: மின்சிகரெட் தொடர்பான பிரச்சினையை எதிர்கொள்ள மலேசியா கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மின்சிகரெட் தொடர்பாக சி்ங்கப்பூரின் நிலைப்பாட்டை மலேசியா பின்பற்ற வேண்டும் என்று மலேசியாவின் பாதுகாப்புமிக்க சமூகக் கூட்டணியின் தலைவர் லீ லாம் தாய் வலியுறுத்தியுள்ளார்.

மின்சிகரெட் பழக்கம், விற்பனை போன்றவற்றுக்கு எதிராக சிங்கப்பூர் கையாளும் அணுகுமுறையைப் போலவே மலேசியாவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கமும் இதர அமைப்புகளும் கேட்டுக்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்ட திரு லீ, அதைத் தாம் அமோதிப்பதாகக் கூறினார்.

“ஆரம்பகட்டத்தில் நடவடிக்கை எடுக்காவிடில், மின்சிகரெட் விவகாரம் பூதாகரமாகிவிடும். அவ்வாறு நேர்ந்தால் அது மலேசியாவுக்குக் கடும் பாதிப்பை ஏற்படுத்தும். மின்சிகரெட் பழக்கத்துக்கு அடிமையாக்கும் பொருள்கள் அதில் இருப்பதாகச் சிங்கப்பூர் கூறுகிறது. இது உண்மை என்றால் அது மிகக் கடுமையான பிரச்சினை விளைவிக்கக்கூடியது என்று புரிந்துகொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று திரு லீ கூறினார்.

குறிப்புச் சொற்கள்