கம்போடியாவில் 8,203 போதைப் புழங்கிகள் கைது

1 mins read
8dc5ce13-df3a-4e0e-90da-bc33ab340083
கைதானவர்களிடமிருந்து 1.62 டன் சட்டவிரோத போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. - மாதிரிப்படம்: பிக்சாபே

நோம்பென்: இவ்வாண்டின் முதல் நான்கு மாதங்களில் மட்டும் போதைப்பொருளைப் புழங்கிய சந்தேகத்தின்பேரில் கம்போடியாவில் 8,203 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

ஆண்டு அடிப்படையில் இது 15 விழுக்காடு அதிகம் என்று வியாழக்கிழமை (மே 1) வெளியிடப்பட்ட போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அறிக்கை தெரிவித்தது.

கைதானவர்களிடமிருந்து 1.62 டன் சட்டவிரோத போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்ற ஆண்டின் முதல் நான்கு மாதங்களைக் காட்டிலும் இது 58 விழுக்காடு குறைவு. 2024 ஜனவரி - ஏப்ரல் காலகட்டத்தில் 3.87 டன் சட்டவிரோத போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டன.

கெட்டமின், எக்ஸ்டசி, ஹெராயின், மெத்தம்பெட்டமின், கொக்கைன் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்களில் அடங்கும்.

கம்போடியாவில் சட்டவிரோத போதைப்பொருள் கடத்துவோர்க்கு மரண தண்டனை விதிக்கப்படுவதில்லை. அந்நாட்டுச் சட்டப்படி, 80 கிராமுக்கு மேல் சட்டவிரோத போதைப்பொருள் கடத்துவோர்க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.

குறிப்புச் சொற்கள்