தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திரைப்படக் குழுவினரை ஈர்க்க கம்போடியா திட்டம்

1 mins read
f1cd26c1-6ffd-460e-8653-04c776888c5e
கம்போடியாவில் சுற்றுப்பயணிகளிடையே பிரபலமாக இருக்கும் அங்கோர் வாட் ஆலய வளாகம். - கோப்புப் படம்: ஏஎஃப்பி

சீம் ரீப்: திரைப்படச் சுற்றுலா (Film tourism) எனப்படும் திரைப்படமெடுப்பதன் தொடர்பில் சிறப்புச் சுற்றுலாத் திட்டங்களை அறிமுகப்படுத்தும் முயற்சியில் கம்போடியா இறங்கியுள்ளது.

கம்போடியப் பிரதமர் ஹுன் மானெட் அதனை அறிவித்தார்.

கம்போடியா, ‘லாரா குரோஃப்ட் - டூம் ரைடர்’ (Lara Croft: Tomb Raider) போன்ற அனைத்துலகத் திரைப்படங்களில் பிரபலச் சுற்றுலாத்தலமாகச் சித்திரிக்கப்பட்டது. அந்நடவடிக்கை பலனளித்ததைத் தொடர்ந்து திரைப்படச் சுற்றுலாத் திட்டத்தை உருவாக்கும் முயற்சியில் அந்நாடு ஈடுபட்டுள்ளது.

அத்திட்டத்தின்கீழ், கம்போடியாவில் சில இடங்களுக்குச் செல்லத் திரைப்படக் குழுவினருக்குச் சலுகை விலையில் நுழைவுச்சீட்டுகள் வழங்கப்படும் என்று திரு மானெட் வியாழக்கிழமையன்று (அக்டோபர் 3) சுற்றுலா வழிகாட்டிகளிடம் கூறினார். பிரபல அங்கோர் வாட் ஆலயம் உள்ள அங்கோர் தொல்பொருள் பூங்கா (Angkor Archaeological Park) போன்ற இடங்கள் அவற்றில் அடங்கும்.

கம்போடியாவில் சுற்றுப்பயணிகளிடையே ஆகப் பிரபலமாக இருக்கும் சீம் ரீப் வட்டாரத்துக்கு வியாழக்கிழமை அதிகாரத்துவமற்ற பயணம் மேற்கொண்டபோது திரு மானெட் திட்டத்தைப் பற்றி விவரித்தார்.

புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு படக் குழுவினர் தனித்தனியாளாகக் கட்டணம் செலுத்தத் தேவையிருக்காது என்றும் அதற்குப் பதிலாக அக்குழுவுக்கென ஒரு கட்டணம் விதிக்கப்படும் என்றும் திரு மானெட் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்