நோம் பென்: கம்போடிய கண்ணிவெடி நடவடிக்கை மையம், 2025ன் முதல் 10 மாதங்களில் 40,000க்கும் மேற்பட்ட கண்ணிவெடிகளையும் வெடிக்காத வெடிபொருள்களையும் அகற்றியதுடன், இரண்டு மில்லியனுக்கும் அதிகமானோருக்கு கண்ணிவெடி ஆபத்து பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.
சனிக்கிழமை (நவம்பர் 15) வெளியிடப்பட்ட அறிக்கையில், 2025 ஜனவரி முதல் அக்டோபர் வரை, கண்ணிவெடி நடவடிக்கை மையத்தின் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகள் பல குறிப்பிடத்தக்க முடிவுகளை எட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட 14,397 ஹெக்டர் நிலப்பரப்பிலிருந்து கண்ணிவெடித் தடயங்களையும் போரின் வெடிபொருள் எச்சங்களையும் அப்புறப்படுத்தியதும் 43,916 கண்ணிவெடிகளையும் வெடிக்காத வெடிபொருள்களையும் கண்டறிந்து அவற்றை அகற்றியதும் இதில் அடங்கும்.
மேலும், கண்ணிவெடி நடவடிக்கை மையம், கண்ணிவெடி ஆபத்து பற்றிய 21,788 கல்வி அமர்வுகளை நடத்தியது. அவற்றின்மூலம் 1,052,438 வீடுகளுக்குச் சென்று கண்ணிவெடி குறித்து விளக்கியதுடன், மொத்தம் 2,220,950 பேருக்குப் பாதுகாப்பு குறித்த தகவல்களும் எடுத்துரைக்கப்பட்டன.

