தட்டம்மை மீண்டும் தலைதூக்கியது குறித்து கம்போடியா எச்சரிக்கை

1 mins read
4efadc8b-26ac-40f2-81cd-0589494b4aff
கம்போடியாவில் சிறுவனுக்கு தட்டம்மைக்கு எதிராக தடுப்பூசி போடப்படுகிறது. - படம்: இணையம்

நோம் பென்: கம்போடியாவில் 2024ல் குறைந்தது 375 பேரிடம் தட்டம்மை தொற்று கண்டறியப்பட்டுள்ள வேளையில், அத்தொற்று மீண்டும் தலைதூக்கியுள்ளது குறித்து அந்நாட்டுச் சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது.

மூச்சு மண்டலம், இருமல், தும்மல் மூலம் வேகமாகப் பரவக்கூடியது தட்டம்மை என்று சனிக்கிழமை (டிசம்பர் 21) கூறிய அமைச்சு, அது கடும் உடல்நலப் பிரச்சினை, பார்வைத்திறன் குறைபாடு, மூளை பாதிப்பு, மரணத்தைக் கூட ஏற்படுத்தலாம் எனச் சொன்னது.

“குறிப்பாக, சில பள்ளிகளிலும் எல்லையோரம் உள்ள மாநிலங்களிலும் தட்டம்மை பாதிப்பு நிலையாக அதிகரித்து வருவதைச் சுகாதார அமைச்சு கண்டறிகிறது,” என்று அமைச்சின் அறிக்கை தெரிவித்தது.

2024 ஜனவரி முதல் டிசம்பர் வரை கம்போடியாவின் 17 மாநிலங்களில் மொத்தம் 375 பேரிடம் தட்டம்மை கண்டறியப்பட்டதாக அமைச்சு கூறியது.

கம்போடியாவில் தட்டம்மை பாதிப்பு இல்லை என 2015 மார்ச்சில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஏழு மாதங்கள் கழித்து அத்தொற்று மீண்டும் தலைதூக்கியது.

குறிப்புச் சொற்கள்