அமித் ஷாதான் ‘மூளை’; கனடா குற்றச்சாட்டு

1 mins read
199de7a7-ad1a-4929-84e6-3e7cdca5b8e4
கனடாவில் உள்ள சீக்கியப் பிரிவினைவாதிகளை அச்சுறுத்தும் நோக்கில் அவர்களுக்கு எதிராகக் கட்டவிழ்க்கப்பட்ட வன்முறைச் சம்பவங்களைத் திரு அமித் ஷா (நடுவில்) திட்டமிட்டார் என்று கனடா அதிகாரிகள் கூறியதாக தி வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டது. - படம்: ஏஎஃப்பி

ஒட்டாவா: கனடாவில் உள்ள சீக்கியப் பிரிவினைவாதிகளைக் கொல்லும் சதித் திட்டங்களுக்கு இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மூளையாக செயல்பட்டதாகக் கனடா அரசாங்கம் அக்டோபர் 29ஆம் தேதியன்று குற்றம் சுமத்தியது.

இந்தக் குற்றச்சாட்டை இந்திய அரசாங்கம் மறுத்துள்ளது.

இதற்கு எந்த ஓர் ஆதாரமும் இல்லை என்று அது தெரிவித்தது.

பிரிவினைவாதிகள் கொலை செய்யப்பட்டதற்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று அது தொடர்ந்து கூறி வருகிறது.

கனடாவில் உள்ள சீக்கியப் பிரிவினைவாதிகளை அச்சுறுத்தும் நோக்கில் அவர்களுக்கு எதிராகக் கட்டவிழ்க்கப்பட்ட வன்முறைச் சம்பவங்களைத் திரு அமித் ஷா திட்டமிட்டார் என்று கனடா அதிகாரிகள் கூறியதாக தி வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டது.

கனடாவில் வசிக்கும் சீக்கியப் பிரிவினைவாதிகளைப் பயங்கரவாதிகள் என இந்தியா வர்ணித்துள்ளது.

இந்தியாவின் பாதுகாப்புக்கு அவர்கள் மிரட்டல் விடுப்பதாக இந்திய அரசாங்கம் கூறுகிறது.

2023ஆம் ஆண்டில் சீக்கியப் பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் கொல்லப்பட்டார்.

இந்தக் கொலையுடன் இந்தியாவுக்குத் தொடர்பு உள்ளது என்று கனடா குற்றம் சாட்டியது.

இந்நிலையில், இவ்வாண்டு அக்டோபர் மாதம் நடுப்பகுதியில் இந்திய அரசதந்திரிகளை கனடா வெளியேற்றியது.

இதற்குப் பதிலடி தரும் வகையில் கனடா அரசதந்திரிகள் இந்தியாவிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

குறிப்புச் சொற்கள்