கொவிட்-19 கிருமித்தொற்று நிலவரம் இந்தியாவில் மோசம் அடைந்துள்ள நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தானிலிருந்து வரும் பயணிகள் விமானங்களுக்கு கனடா அரசு 30 நாட்கள் தடை விதித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொவிட்-19 கிருமித்தொற்று 314,000க்கும் மேட்பட்டவர்களை பாதித்துள்ளதை தொடர்ந்து இந்த தடை உடனடியாக நடப்புக்கு வரும் என்று கனடாவின் போக்குவரத்து அமைச்சர் திரு ஒமார் தெரிவித்தார்.
பயணிகள் விமானங்களுக்கு இந்த 30 நாள் தடை பொருந்தும் ஆனால் சரக்கு விமானங்களுக்கு இந்த தடை இருக்காது.
இந்தியாவிலிருந்து கனடாவுக்கு விமானம் வழி வரும் பயணிகளின் எண்ணிக்கையில் பாதி பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று இருப்பது சோதனைக்குப் பிறகு தெரிய வந்துள்ளதால் இந்த தடை விதிக்கப்படுவதாக கனடாவின் சுகாதார அமைச்சர் கூறினார்.
பாகிஸ்தானிலிருந்து வரும் பயணிகளிலும் கொவிட்-19 கிருமித்தொற்று அதிகரித்த நிலையில் இருக்கிறது.
கனடாவின் விமான போக்குவரத்து வருகையாளர் பட்டியலில் 20% விமானங்கள் இந்தியாவிலிருந்து வருபவை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கனடாவில் வாழும் மக்களில் 1 மில்லியனுக்கு மேற்பட்டோர் இந்திய வம்சாவளியினர்.

