அரசாங்கக் கருவிகளில் டிக்டாக் இருக்கக்கூடாது

அரசாங்கக் கருவிகளில் டிக்டாக் இருக்கக்கூடாது

1 mins read
32de769a-e8b8-4ccf-8f7e-5b0b8b8bf3bb
படம்: ராய்ட்டர்ஸ் -

கனடா அரசாங்கம் இன்று (பிப்ரவரி 28) முதல் அதன் அரசாங்கக் கருவிகளில் டிக்டாக் செயலி இருக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.

டிக்டாக் செயலியால் ஏற்றுக்கொள்ளமுடியாத அளவு பாதுகாப்பு மற்றும் தனிநபர் சுதந்திர பிரச்சினைகள் இருப்பதாக அது கூறியது.

கனடா அரசாங்கத்தின் இந்த முடிவு பெரும் ஏமாற்றம் தருவதாக டிக்டாக் கூறியுள்ளது.

சில நாள்களுக்கு முன்னர்தான் ஐரோப்பிய ஆணையமும் இதே போன்ற முடிவை எடுத்திருந்தது.

அமெரிக்காவிலும் கடந்த ஆண்டு அரசாங்க அதிகாரிகளுக்கு டிக்டாக் குறித்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

பாதுகாப்பு பிரச்சினைகள் காரணமாக டிக்டாக்கிற்கு கடந்த சில ஆண்டுகளாகவே பிரச்சினைகள் உள்ளன. குறிப்பாக அது சீன அரசாங்கத்துடன் கொண்டுள்ள உறவு குறித்தும் கேள்விகள் எழுந்து வருகிறது

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்