ஒட்டாவா: கனடா நாடாளுமன்றத் தேர்தலில் காலிஸ்தான் ஆதரவாளர் என்று சொல்லப்படும் என்டிபி கட்சித் தலைவரான ஜக்மீத் சிங் படுதோல்வி அடைந்தார்.
பிரதமர் மார்க் கார்னி நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைத்ததைத் தொடர்ந்து திங்கட்கிழமை பொதுத் தேர்தல் நடைபெற்றது.
இதில் பெரும்பான்மை இடங்களைப் பெற்று ஆளும் லிபரல் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
இதற்கிடையே இந்தத் தேர்தலில் போட்டியிட்ட என்டிபி எனப்படும் புதிய ஜனநாயக கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. அக்கட்சியின் தலைவரும் காலிஸ்தான் ஆதரவாளர் என்று அறியப்படுபவருமான ஜக்மீத் சிங் தோல்வி அடைந்துள்ளார்.
இதையடுத்து, கட்சித் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள பர்னாபி சென்ட்ரல் தொகுதியில் ஜக்மீத் சிங் போட்டியிட்டு படுதோல்வியைத் தழுவியுள்ளார். இதில் லிபரல் கட்சி வேட்பாளர் வாட் சாங்கிடம் அவர் தோல்வி அடைந்தார்.
கடந்த முறை இதே தொகுதியில் ஜக்மீத் சிங் வெற்றி பெற்றார்.