வேகமாக காரோட்டியதற்காக கனேடிய நிதியமைச்சருக்கு அபராதம்

வேகமாக காரோட்டியதற்காக கனேடிய நிதியமைச்சருக்கு அபராதம்

1 mins read
db17c2dd-4de7-41e3-9477-193fe7778193
கனடா நாட்டு நிதியமைச்சர் கிறிஸ்டியா ஃபிரீலேண்டுக்கு காரை வேகமாக ஓட்டியதற்காக அபராதம் விதிக்கப்பட்டது. - படம்: ராய்ட்டர்ஸ்

ஒட்டாவா: கனடா நாட்டு நிதியமைச்சர் கிறிஸ்டியா ஃபிரீலேண்டுக்கு வேகமாக கார் ஓட்டியதற்காக 273 கனேடிய டாலர் (S$273.50) அபராதம் விதிக்கப்பட்டதாக அவரது பேச்சாளர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

மிதிவண்டி ஓட்டுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவரான அவர் தன்னிடம் கார் இல்லை என முன்பு நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியிருந்தார்.

அவர் காரை கிராண்டே பிரேரி, பீஸ் ரிவர் நகரங்களுக்கு இடையே மணிக்கு 132 கி.மீ. வேகத்தில் ஓட்டியதற்காக அபராதம் விதிக்கப்பட்டது எனவும் அத்தொகையை அவர் முழுமையாகச் செலுத்திவிட்டதாகவும் அவரது பேச்சாளர் சொன்னார்.

இந்தச் சம்பவம் எப்பொழுது நடந்தது என்பது குறித்து எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.

‘கவுன்டர் சிக்னல்’ என்னும் இணையத்தளம் இச்செய்தியை முதலில் வெளியாக்கியது.

குறிப்புச் சொற்கள்