கனடா பிரதமர் பொங்கல் செய்தி: தமிழ்ச் சமூக வரலாற்றை மக்கள் அறிய ஊக்கமூட்டுவேன்

கனடா பிரதமர் பொங்கல் செய்தி: தமிழ்ச் சமூக வரலாற்றை மக்கள் அறிய ஊக்கமூட்டுவேன்

1 mins read
55157962-e512-4654-8a64-1857e4a968b0
கனடா நாட்டுப் பிர­த­மர் ஜஸ்­டின் ட்ரூடோ. படம்: ஏஃப்பி -

டொரான்டோ: தமி­ழர்­க­ளின் வர­லாற்­றை­யும் தொன்­மை­யை­யும் தமிழ் மொழி­யின் சிறப்­பை­யும் காலத்­தால் அழி­யாத தமிழின் இளமை­யை­யும் வலி­மை­யை­யும் கனடா நாட்டு மக்­கள் அறிந்­து­கொள்ள ஊக்­க­மூட்­டப்போவ­தாக அந்த நாட்­டின் பிர­த­மர் ஜஸ்­டின் ட்ரூடோ பொங்­கல் செய்­தி­யில் தெரி­வித்து இருக்­கி­றார்.

'குடும்­பங்­க­ளு­டன் சேர்ந்து கொண்­டா­டும் தைப் பொங்­கல்' என்று குறிப்­பிட்டு வாழ்த்து தெரி­வித்து இருக்­கும் அவர், "நான்கு நாள் திரு­வி­ழா­வின்போது, ​​குடும்­பத்­தி­ன­ரும் நண்­பர்களும் ஆண்­டின் சிறந்த அறு­வடைக்கு நன்றி செலுத்­து­வ­தோடு, இனி­மை­யான அரிசி பொங்­க­லைப் பகிர்ந்து கொள்­கி­றார்­கள்," என்று மகிழ்ச்சியுடன் தெரி­வித்­துள்­ளார்.

Watch on YouTube

கனடா பிரதமர், கொவிட்-19 கார­ண­மாக பொது நிகழ்ச்­சி­க­ளைத் தவிர்த்து வருகிறார்.

"கன­டா­வி­லும் உலக அள­விலும் தை பொங்­க­லைக் கொண்­டா­டும் அனை­வ­ருக்­கும் அமைதி மற்­றும் நல்ல ஆரோக்­கி­யம் ஏற்­பட நானும் என் மனை­வி­யும் இனிய தைப் பொங்­கல் நல்­வாழ்த்­து­க­ளைத் தெரி­வித்­துக்­கொள்­கிறோம்," என்று பிரதமர் தனது வாழ்த்­துச் செய்­தி­யில் கூறி இருக்­கிறார்.