தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமெரிக்க மதுபானங்களைத் தவிர்க்கும் கனடியர்கள்

1 mins read
eabae328-bd90-4df5-ac9b-24f6f3d7c6cb
 கனடாவின் பல பகுதிகளில் அமெரிக்க மதுபானங்களைக் கடைகளில் விற்பதை உரிமையாளர்கள் நிறுத்தியுள்ளனர். - படம்: கனடாபிரஸ்

ஒட்டாவா: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் வரி விதிப்பு அறிவிப்புகளால் கனடா அதிருப்தியில் உள்ளது.

இந்நிலையில், உள்நாட்டுப் பொருளியலை ஊக்குவிக்கும் விதமாக கனடியர்கள் கனடாவில் தயார் செய்யப்பட்ட பொருள்களை அதிகம் வாங்கத் தொடங்கியுள்ளனர். அதேபோல் அமெரிக்கப் பொருள்களையும் அவர்கள் தவிர்க்கத் தொடங்கியுள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக கனடாவின் பல பகுதிகளில் அமெரிக்க மதுபானங்களைக் கடைகளில் விற்பதை உரிமையாளர்கள் நிறுத்தியுள்ளனர்.

இது ‘ஜேக் டேனியல்ஸ்’ உள்ளிட்ட மதுபானங்களைத் தயாரிக்கும் அமெரிக்க நிறுவனங்களுக்குப் பெரிய அடியாக அமைந்துள்ளது.

கடை உரிமையாளர்களின் நடவடிக்கை திரு டிரம்பின் வரிவிதிப்பைவிட மோசமான ஒன்று என்று அமெரிக்க மதுபான உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

உலகில் ஆக அதிகமாக மதுபானங்களை வாங்கும் அமைப்பான ஓன்டாரியோ மாநிலத்தின் மதுபானக் கட்டுப்பாட்டு வாரியம் அமெரிக்காவில் தயாரிக்கப்படும் மதுபானங்களைக் கடைகளிலிருந்து அகற்றுவதாகச் செவ்வாய்க்கிழமை (மார்ச் 4) அறிவித்தது.

இது அமெரிக்க மதுபான நிறுவனங்களுக்குக் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓன்டாரியோவில் மட்டும் ஆண்டுக்குக் கிட்டத்தட்ட 1 பில்லியன் டாலர் அளவிலான மதுபான விற்பனை நடக்கும்.

அதிபர் டிரம்ப்பின் வரி விதிப்புக்கு எதிராக கனடாவும் பதிலடி வரிவிதிப்பை அறிவித்துள்ளது. இதனால் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பீர்,வைன் உள்ளிட்ட மதுபானங்களை இறக்குமதி செய்ய 25 விழுக்காடு கூடுதல் வரி செலுத்த வேண்டும்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்