கோலாலம்பூர்: மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் சாலையோரம் இருந்த வடிகால் ஒன்று இடிந்து விழுந்தது. அதனால் அங்கு பெரிய பள்ளம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவம் கம்போங் கெரிஞ்சியில் உள்ள ஜாலான் பன்டாய் பெர்மாயிலில் நிகழ்ந்தது.
அதுகுறித்து தாங்கள் அறிந்துள்ளதாகவும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கோலாலம்பூர் நகரமன்றம் சமூக ஊடகம் வழி தகவல் வெளியிட்டுள்ளது.
வடிகால் இடிந்து விழுந்த பிறகு அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்ட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வடிகால் இடிந்ததில் அதன் அருகே இருந்த நடைபாதையும் இடிந்து விழுந்தது. அதுகுறித்த படங்களும் சமூக ஊடகத்தில் வலம் வருகிறது.
சில நாள்களுக்கு முன்னர் யாரும் எதிர்பாரா வகையில் மஸ்ஜித் இந்தியாவில் உள்ள நடைபாதையில் திடீரென்று ஆழ்குழி ஏற்பட்டது. அதில் இந்தியாவைச் சேர்ந்த சுற்றுப்பயணி ஒருவர் விழுந்து காணாமல் போனார். அவரைத் தேடும் பணிகள் இன்னும் தொடர்கின்றன.