வியட்னாமில் போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்கான மரண தண்டனை ரத்து

வியட்னாமில் போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்கான மரண தண்டனை ரத்து

படம்: அன்ஸ்பிளேஷ்

20 Nov 2026 - 11:00 pm

1 mins read

ஹனோய்: போதைப்பொருள் கடத்தலுக்கும் வேறு சில குற்றங்களுக்குமான மரண தண்டனையை வியட்னாம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 20) ரத்துச் செய்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, நான்கு குற்றங்களுக்கு மட்டுமே மரண தண்டனை விதிக்கப்படும்.

கம்யூனிச நாடான வியட்னாம், 2013ஆம் ஆண்டில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லும் முறையைக் கைவிட்ட பிறகு, நச்சு ஊசி செலுத்தும் முறையை மரண தண்டனையை நிறைவேற்றும் வழியாகப் பயன்படுத்தி வருகிறது. ஆனால், இதுவரை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கையை அந்நாடு அறிவித்ததில்லை.

2023ஆம் ஆண்டிறுதி நிலவரப்படி, அந்நாட்டில் 1,200க்கும் மேற்பட்டோர் மரண தண்டனைக் கைதிகளாய் இருந்ததாக ‘அம்னஸ்டி இன்டர்நேஷனல்’ அமைப்பு மதிப்பிடுகிறது.

கடந்த செப்டம்பர் மாதம், பிரான்சிலிருந்து வியட்னாமிற்குப் போதைப்பொருள் கடத்திய குற்றத்திற்காக 11 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

திருத்தப்பட்ட தண்டனைச் சட்டத்தின்கீழ், தேசத்துரோகம், கொலை, பயங்கரவாதம், சட்டவிரோதப் போதைப்பொருள் உற்பத்தி ஆகிய நான்கு குற்றங்களுக்கு மட்டுமே மரண தண்டனை விதிக்கப்படும்.

போதைப்பொருள் கடத்தலுடன் சேர்த்து, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள், கிளர்ச்சி, சிறார் பாலியல் வன்கொடுமை ஆகிய குற்றங்களும் மரண தண்டனைப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு அதிகபட்சத் தண்டனையாக ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்