துபாய்: இஸ்ரேலிய உளவுத் துறையுடன் தொடர்பில் இருந்து, ஜனவரி மாதம் நடந்த ஆர்ப்பாட்டங்களின்போது டெஹ்ரானில் உள்ள குல்ஹாக் பள்ளிவாசலுக்குத் தீ மூட்டியதாக குற்றஞ்சாட்டப்பட்ட ஆடவருக்கு மரண தண்டனை செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21) நிறைவேற்றப்பட்டது.
இதன் விவரங்களை ஈரான் நீதித்துறையின் மிசான் செய்தி நிறுவனம் வெளியிட்டது. அமிரலி மிர்ஜஃபாரி என்று அடையாளம் காணப்பட்ட ஆடவர், பாதுகாப்புத் துறைக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டு அவர்மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டன.
அவரது மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்தது.
இஸ்லாமியக் குடியரசான ஈரானில் இவ்வாண்டு தொடக்கத்தில் நடந்த ஆர்ப்பாட்டங்களை வரலாறு காணாத வகையில் அந்நாட்டு ஆட்சியாளர்கள் மிகக் கடுமையாக ஒடுக்கினர்.

