ஆஸ்திரேலியாவில் கூட்டத்தில் புகுந்த கார்; 10 பேர் காயம்

ஆஸ்திரேலியாவில் கூட்டத்தில் புகுந்த கார்; 10 பேர் காயம்

படம்: என்பிஎன் தொலைக்காட்சி, ஃபேஸ்புக்

03 Oct 2026 - 11:29 am

1 mins read

சிட்னி: ஆஸ்திரேலியாவின் நியூகாசல் நகரில் சனிக்கிழமை (அக்டோபர் 3) மக்கள் கூட்டத்திற்குள் கார் ஒன்று புகுந்து மோதியதில் சிறுவன் உட்பட 10 பேர் காயமடைந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தேசிய ரக்பி இறுதிப்போட்டியில் பங்கேற்பதற்காகச் சிட்னி செல்லவிருந்த ‘நியூகாசல் நைட்ஸ்’ ரக்பி குழுவை வழியனுப்ப ஆயிரக்கணக்கானோர் திரண்டு நகரின் வீதிகளில் அணிவகுத்து நின்றனர். அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் கூட்டத்திற்குள் புகுந்ததில் விபத்து ஏற்பட்டது.

காயமடைந்தவர்களில் இருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். சிறுவன் உட்பட எட்டுப் பேரின் உடல்நிலை சீராக உள்ளது. அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அவசர மருத்துவ வாகனச் சேவைத் தொடர்பாளர் தெரிவித்தார்.

காரை ஓட்டிவந்தவரைக் காவல்துறையினர் சம்பவ இடத்திலேயே கைது செய்தனர்.

“கார் ஓட்டுநர் பயங்கரவாதி அல்லர், உ ற்சாக மிகுதியால் காரின் கட்டுப்பாட்டை இழந்த ரக்பி ரசிகர்,” என்று நியூகாசல் மேயர் கவின் மோரிஸ் கூறினார்.

சம்பவத்திற்குப் பயங்கரவாதப் பின்னணி எதுவும் இல்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்டனி அல்பனீஸ், காயமடைந்த அனைவருக்கும் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டார். நியூகாசல் ரசிகர்களுக்கு இது மகிழ்ச்சியும் பெருமையும் நிறைந்த வார இறுதியாக அமைந்திருக்க வேண்டும் என்றும் அவர் வருத்தத்துடன் குறிப்பிட்டிருந்தார்.

குறிப்புச் சொற்கள்