பிரிட்டனில் பாதசாரிகள்மீது ஏறிய கார்; ஆடவர் கைது

பிரிட்டனில் பாதசாரிகள்மீது ஏறிய கார்; ஆடவர் கைது

1 mins read
கைது செய்யப்பட்டவர் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவர்
4fa3ad50-eba7-4164-8a91-b7e0b41781be
டெர்பி நகரில் தாக்குதல் நடத்தப்பட்ட இடம் தற்காலிகமாக மூடப்படது. - படம்: பிபிசி

லண்டன்: இங்கிலாந்தின் டெர்பி நகரில் சனிக்கிழமை (மார்ச் 28) மாலை, பாதசாரிகள்மீது காரைக் கொண்டு ஆடவர் ஒருவர் மோதினார்.

இந்தச் சம்பவத்தில் ஏழு பேர் காயமடைந்தனர். ஆனால் அவர்களின் உயிருக்கு ஆபத்து இல்லை என டெர்பி நகரக் காவல்துறை தெரிவித்துள்ளது.

காயமடைந்தோர்க்குச் சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் பின்னர் அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட ஆடவர் கருப்பு சுஸுகி ஸ்விஃப்ட் காரைப் பயன்படுத்தியதாகவும் தாக்குதல் சம்பவம் உள்ளூர் நேரப்படி இரவு 9.30 மணிவாக்கில் நடந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட 30 வயது மதிக்கத்தக்க ஆடவர் ஒருவர் சிறிது நேரத்திலேயே கைது செய்யப்பட்டார்.

மோதிவிட்டு காருடன் தப்பிச்சென்ற ஆடவர், பின்னர் அதிகாரிகள் நடத்திய தேடுதல் வேட்டையில் சிக்கினார்.

இது ஓர் அச்சுறுத்தல் தரும் சம்பவம் எனக் கூறிய காவல்துறையினர், பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் என கேட்டுக்கொண்டனர்.

குறிப்புச் சொற்கள்