பெட்டாலிங் ஜெயா: மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்கு அருகில் உள்ள மைன்ஸ் ஏரிக்குள் தனியார் வாடகை கார் ஒன்று விழுந்தது.
அந்த காரை ஓட்டிய 49 வயது பெண் மீட்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் நவம்பர் 16ஆம் தேதி பிற்பகல் 3.30 மணி அளவில் நிகழ்ந்ததாக செர்டாங் மாவட்ட காவல்துறைத் தலைவரான உதவி ஆணையர் அன்பழகன் ஆறுமுகம் தெரிவித்தார்.
அப்போது கனமழை பெய்ததாக அவர் கூறினார்.
இந்நிலையில், அவ்விடத்தில் ஏரி இருப்பது தமது கண்களுக்குத் தட்டுப்படவில்லை என்று பத்திரமாக மீட்கப்பட்ட பின், அப்பெண் தெரிவித்தார்.
ஏரிக்குள் விழுந்த காரிலிருந்து பெண் ஒருவர் உதவி கேட்டு அலறுவதைக் காட்டும் காணொளி டிக்டாக் தளத்தில் பதிவேவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
அந்த காரை நோக்கி பாதுகாப்பு ஊழியர்கள் பலர் படகில் சென்றதைக் காணொளி காட்டியது.
ஏரிக்குள் விழுந்த காரிலிருந்து அப்பெண் காயமின்றி வெளியேறித் தப்பினார்.
தொடர்புடைய செய்திகள்
ஆனால் அவரது கார் ஏரியில் மூழ்கியது.
அது பிறகு ஏரியிலிருந்து வெளியே எடுக்கப்பட்டது.
ஏரிக்கு அருகில் தடுப்புகள் போடப்பட்டிருந்தால் இச்சம்பவத்தைத் தவிர்த்திருக்கலாம் என்று இணையவாசிகள் பலர் கருத்து தெரிவித்தனர்.