ஹாங்காங்கை நெருங்கும் சூறாவளி: விமானச் சேவைகள் ரத்து

1 mins read
78be63c7-9bb7-482b-8007-9fc7b3bacef7
பாதிக்கப்படும் பயணிகளுக்குத் தகுந்த உதவிகள் வழங்கப்படும் என்று கேத்தே பசிபிக் தெரிவித்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஹாங்காங்கை விஃபா சூறாவளி நெருங்கி வருகிறது. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 20) கேத்தே பசிபிக் விமான நிறுவனம் ஹாங்காங் நோக்கிச் செல்லும், அங்கிருந்து புறப்படும் விமானங்களை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

சில கேத்தே பசிபிக் விமானங்களின் பயணங்கள் தாமதமாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

“ஹாங்காங் அனைத்துலக விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணியிலிருந்து மாலை 6 மணிவரை கேத்தே பசிபிக் விமானங்கள் தரையிறங்காது, புறப்படாது,” என்று அந்நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

பாதிக்கப்படும் பயணிகளுக்குத் தகுந்த உதவிகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம், ஜூலை 20ஆம் தேதி ஹாங்காங் செல்லத் திட்டமிட்டிருந்த ‘எஸ்கியூ874’, ‘எஸ்கியூ882’ விமானச் சேவைகளை ரத்து செய்வதாக அதன் இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது. மேலும், ஜூலை 20ஆம் தேதி ஹாங்காங்கிலிருந்து சிங்கப்பூர் வரவிருந்த மூன்று விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

விஃபா சூறாவளி சனிக்கிழமை இரவு முதல் பலத்த காற்றுடன் ஹாங்காங்கைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நகரத்தின் பாதுகாப்பு அமைப்பும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்