ஷேக் ஹசினா நாடு திரும்பினால் சிறைத்தண்டனை உறுதி: பங்ளாதேஷ்

ஷேக் ஹசினா நாடு திரும்பினால் சிறைத்தண்டனை உறுதி: பங்ளாதேஷ்

1 mins read
e55af32d-777a-4ea3-b85f-2cba7d746e50
இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள ஷேக் ஹசினா இவ்வாண்டு டிசம்பரில் நாடு திரும்பப் போவதாகத் தெரிவித்துள்ளார். - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

டாக்கா: இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள பங்ளாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினா நாடு திரும்பினால் அவருக்குச் சிறைத் தண்டனை உறுதி என்று அந்நாட்டின் மூத்த அதிகாரி ஒருவர் திங்கட்கிழமை தெரிவித்தார்.

வரும் டிசம்பர் மாதத்தில் பங்களாதேஷ் திரும்பி நீதிமன்றத்தில் சரணடையத் திட்டமிட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் ஹசினா தெரிவித்த சில நாள்களிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த 2024ஆம் ஆண்டில் அவரது நீண்டகால ஆட்சிக்கு எதிராக மக்கள் வெகுண்டெழுந்தனர். இதையடுத்து நடந்த வன்முறையில் பலர் கொல்லப்பட்டனர்.

அவரது கட்சியும் தேர்தலில் போட்டியிட முடியாமல் தடை செய்யப்பட்டுள்ளது.

வன்முறையில் 1,400 பேர் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

அந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் அவர் புதுடெல்லியில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் “ஷேக் ஹசினா ஒரு தண்டனைப் பெற்ற குற்றவாளி. அவர் சரணடைந்தால், பங்களாதேஷ் சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று பங்களாதேஷின் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மாணவர்கள் தலைமையிலான எழுச்சியை ஒடுக்குவதற்காக கடுமையான நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டதற்காக பங்களாதேஷின் போர்க்குற்ற நீதிமன்றம் கடந்த நவம்பர் மாதம் ஷேக் ஹசினாவுக்கு அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகமலே மரண தண்டனை விதித்தது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

ஆனால் தன்மீதான குற்றச்சாட்டுகளை ஷேக் ஹசினா மறுத்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்