'ஷனேல்' கைப்பைகளின் விலை செப்டம்பரில் மேலும் உயரக்கூடும் என்று அதன் முன்னணி நிர்வாகி ஒருவர் கூறியிருக்கிறார். ஷனேலுக்கே உரிய மடிப்புப் பைகளும் அவற்றில் அடங்கும்.
ஷனெல் நிறுவனம், வழக்கமாக மார்ச் மாதத்திலும் செப்டம்பர் மாதத்திலும் கைப்பைகளின் விலைகளை மறுஆய்வு செய்யும்.
கடந்த மார்ச் மாதம், உலகம் முழுவதும் உள்ள அதன் பைகள் சராசரியாக 8 விழுக்காடு விலை உயர்வைக் கண்டதாக அதன் தலைமை நிதி அதிகாரி ஃபிலிப் புளோண்டயோ நேர்காணல் ஒன்றில் கூறினார்.
பிரான்சில் நடுத்தர அளவிலான மடிப்புப் பை ஒன்றின் விலை தற்போது €9,700 (S$14,000). 18 மாதங்களுக்கு முன்னர் இருந்த விலையைக் காட்டிலும் அது €1,900 அதிகம். ஒப்புநோக்க, 25 செண்டிமீட்டர் நீளம்கொண்ட 'எர்மெக்ஸ்' கைப்பை தற்போது €8,000க்கு விற்கப்படுகிறது.
பணவீக்கத்திற்குத் தகுந்தவாறு விலை அதிகரிப்பை நிர்ணயிக்கும் தன் கொள்கையைப் பின்பற்ற திட்டமிடுவதாக ஷனேல் கூறியுள்ளது.

