உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்க மலேசிய சமையல் எண்ணெய் மானியத்தில் மாற்றம்

உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்க மலேசிய சமையல் எண்ணெய் மானியத்தில் மாற்றம்

2 mins read
041d74b4-8115-4b72-a94d-fee440fd96c2
மலேசியப் பேரங்காடி ஒன்றில் சமையல் எண்ணெய்யை தூக்கிச் செ;ல்லும் ஆடவர். - படம்: எஸ்பிஹெச் ஊடகம்

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் சமையல் எண்ணெய் மறுபொட்டலமிடும் நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான சமையல் எண்ணெய்யை உள்ளூர் உற்பத்தி ஆலைகளிலிருந்து பெறுவதை ஊக்குவிக்கும் வகையில், சமையல் எண்ணெய் விலையை நிலைப்படுத்தும் திட்டத்தில் மேம்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக உள்நாட்டு வர்த்தகம், வாழ்க்கைச் செலவின அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கான நிதி ஒதுக்கீட்டு செயல்முறையில் மாற்றங்கள் செய்யப்படும். அதோடு உள்ளூர் உற்பத்தி ஆலைகளுக்கும் மறுபொட்டலமிடும் நிறுவனங்களுக்கும் இடையே வணிகச் செயல்பாடுகள் ஒருங்கிணைக்கப்படும் என்று அத்துறையின் அமைச்சர் அர்மிசான் முகம்மது அலி சனிக்கிழமை (ஜூலை 18) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் சமையல் எண்ணெய் மானியங்கள், விலை கட்டுப்பாடு உட்பட்ட அதன் மேலாண்மை குறித்து பொதுக் கணக்குகளுக்கான அரசாங்கக் குழு (PAC) முன்வைத்த பரிந்துரைகளை அவரது அமைச்சு வரவேற்பதாகவும் அவர் தெரிவித்தார்.

2007ஆம் ஆண்டில் அறிமுகமான திட்டப்படி பல சிக்கல்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, 2023ஆம் ஆண்டுமுதல் பல திருத்தங்கள் கட்டம் கட்டமாக செயல்படுத்தப்பட்டதை அமைச்சர் அறிக்கையில் தெளிவுபடுத்தினார்.

2023 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை இடைப்பட்ட காலத்தில் அமைச்சகம் மேற்கொண்ட உள்தணிக்கைகள் வழியாக இந்த முயற்சிகள் மேலும் வலுப்படுத்தப்பட்டன எனவும் அவர் கூறினார். 1 கிலோ சமையல் எண்ணெய் பொட்டலங்களுக்கான தற்போதைய மொத்த மானிய முறையிலிருந்து, மின்னணுவைக்கொண்டு சமையல் எண்ணெய் விலையை நிலைப்படுத்தும் திட்டத்துக்கு (eCoss) மாறுவதை விரைவுபடுத்த வேண்டும். இதனை முன்வைத்த பொதுக் கணக்குக் குழுவின் பரிந்துரையை அவர் குறிப்பிட்டு அதனை வரவேற்பதாக ஆர்மிசான் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
மலேசியாசமையல் கலைஎண்ணெய்விலைவாசிமானியம்சட்டத் திருத்தம்நாடாளுமன்றம்