குழந்தைகளைக் கடத்தியதாக நம்பப்படும் கும்பல்மீது இந்தோனீசியாவில் குற்றச்சாட்டு

குழந்தைகளைக் கடத்தியதாக நம்பப்படும் கும்பல்மீது இந்தோனீசியாவில் குற்றச்சாட்டு

1 mins read
சந்தேக நபர்கள் சிங்கப்பூருக்கும் குழந்தைகளை கடத்தியதாக நம்பப்படுகிறது
3052fa15-b556-43e7-a6d2-9879b47eddb4
சந்தேக நபர்கள் பாண்டுங் நீதிமன்றத்துக்கு வந்தபோது பதிவான படம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பாண்டுங்: இந்தோனீசியாவில் பல்வேறு நகரங்களுக்கும் சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் குழந்தைகளைக் கடத்தியதாக நம்பப்படும் 19 பேர் மீது இந்தோனீசிய அரசாங்க வழக்கறிஞர்கள் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 7) குற்றச்சாட்டுகளைச் சுமத்தினர்.

இது, கடந்த சில ஆண்டுகளில் இந்தோனீசியா சந்தித்திருக்கும் ஆக மோசமான கடத்தல் சம்பவங்களில் ஒன்று என அதிகாரிகள் வகைப்படுத்தியுள்ளனர்.

இவ்வழக்கில் முக்கியமானவர் எனக் கூறப்படுபவர் லிலி என்றழைக்கப்படும் லியெ சியு லுவான், 70, எனும் மாது. அவர்தான் கும்பலின் தலைவர் என்று விசாரணை நடத்திய காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சென்ற ஆண்டு ஜூலை மாதம் சிங்கப்பூரிலிருந்து திரும்பி வரும்போது அவர் சுக்கார்னோ ஹட்டா அனைத்துலக விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

லியெக்கு எதிராக அரசாங்க வழக்கறிஞர்கள் மூன்று குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பார்த்த நீதித்துறை ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனீசிய நீதித்துறையின்படி, அரசாங்க வழக்கறிஞர்கள் ஒரு குற்றச்சாட்டுக்கு மேல் சுமத்த முடியும். அது, முக்கியக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாவிட்டால் மற்றக் குற்றங்களையும் நீதிபதி கருத்தில்கொள்ள வகைசெய்கிறது.

இந்த விவகாரத்தில் முக்கியக் குற்றச்சாட்டு ஆள்கடத்தல் தொடர்பானது. பிறருடன் இணைந்து செயல்பட்டது, குற்றத்தை மறுபடியும் புரிந்தது போன்ற குற்றச்சாட்டுகளுடன் முக்கியக் குற்றச்சாட்டும் நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்